ஹைட்ரோகார்பன் அகழ்வு ஆய்விற்கான ஏலக்குத்தகை ஒப்பந்தம் – தமிழ்நாடு
March 2 , 2025 32 days 111 0
தென் தமிழகத்தின் மன்னார் வளைகுடாவின் ஆழ்கடல் பகுதியில் 9,990.96 சதுர கி.மீ பரப்பளவு ஆனது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தினால் வழங்கப்பட்ட ஹைட்ரோகார்பன் ஆய்வுக்கான மிகச் சமீபத்திய ஒரு ஏலக்குத்தகை ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
நிறுவனங்கள் அதன் எண்ணெய் அகழகெடுப்பு ஆய்வு உரிமைகளுக்கான ஏலங்களை சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கின்ற வகையில் சுதந்திரமாக உற்பத்தித் தொகுதிகளைத் தேர்ந்தெடுத்து உரிமம் பெறுதல் திட்டத்தின் 10வது சுற்று ஏலத்தின் ஒரு பகுதியாகும்.
இந்த ஏலக் குத்தகை ஒப்பந்தமானது, மொத்தம் 1,91,986 சதுர கி.மீ பரப்பிலான கடல் பரப்பைக் கொண்டுள்ள நாடு முழுவதும் உள்ள 25 கடல் பகுதிகளை உள்ளடக்கியது.
ஹைட்ரோகார்பன் அகழகெடுப்பு ஆய்வு மற்றும் உரிமக் கொள்கையின் கீழ் ஒரே ஏலச் சுற்றில் ஏக்கர் அளவிலான மிகப்பெரிய அளவு நிலப்பரப்பு வழங்கப்படுவதை இது குறிக்கிறது.
மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பகம் ஆனது, கடல் பசு, ஆமைகள் மற்றும் கடல் சார் பாலூட்டிகள் போன்ற அரிய மற்றும் அழிந்து வரும் உயிரினங்கள் மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றன.