பெட்ரோலியத்தின் வரையறையில் ஷேல் வாயுவினை சேர்ப்பதற்காக மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு விதிகள், 1959-னை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திருத்தி அமைத்துள்ளது.
ஏற்கனவே இயங்கி வரும் தொகுதிகளில் உள்ள வளங்களை ஆய்வு செய்யவும் அவ்வளங்களை உருவாக்கிடவும் தனியார் நிறுவனங்களுக்கு இம்மாற்றம் அனுமதி அளிக்கும்.
முன்பு ஷேல் வாயுவை சேர்க்கப்படாத வரையறையானது மரபுமுறை எண்ணெய் மற்றும் வாயு (அ) நிலக்கரி படுகையிலிருந்து எடுக்கப்படும் மீத்தேன் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் அத்துறைகளில் ஏற்படும் விதிமீறல்களைத் தடுத்தது.
ஷேலின் மேல்தகடு மற்றும் அதன் எளிதில் பிளக்கத்தகு இயல்புக்காக மற்ற களிமப்பாறைகளிலிருந்து சிறப்பாக வகைபடுத்தப்படுகிறது.
ஷேல் பாறைகளின் உருவாக்கத்தின் போது அதில் அகப்பட்டு மீட்டெடுக்கப்படும் வாயு ஷேல் வாயு ஆகும்.
ஷேல் வாயு இயற்கை வாயுவை விட மலிவானதாகும். மேலும் இது 50 சதவீதத்திற்கும் குறைவான Co2 வாயுவினை வெளியிடுவதால் மின்சாரம் தயாரிப்பதற்கு சிறந்த ஆதாரமாக உள்ளது.