TNPSC Thervupettagam

ஹைட்ரோகார்பன் வரையறை - திருத்தம்

July 27 , 2018 2317 days 706 0
  • பெட்ரோலியத்தின் வரையறையில் ஷேல் வாயுவினை சேர்ப்பதற்காக மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை வாயு விதிகள், 1959-னை மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் திருத்தி அமைத்துள்ளது.
  • ஏற்கனவே இயங்கி வரும் தொகுதிகளில் உள்ள வளங்களை ஆய்வு செய்யவும் அவ்வளங்களை உருவாக்கிடவும் தனியார் நிறுவனங்களுக்கு இம்மாற்றம் அனுமதி அளிக்கும்.
  • முன்பு ஷேல் வாயுவை சேர்க்கப்படாத வரையறையானது மரபுமுறை எண்ணெய் மற்றும் வாயு (அ) நிலக்கரி படுகையிலிருந்து எடுக்கப்படும் மீத்தேன் ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களால் அத்துறைகளில் ஏற்படும் விதிமீறல்களைத் தடுத்தது.
  • ஷேலின் மேல்தகடு மற்றும் அதன் எளிதில் பிளக்கத்தகு இயல்புக்காக மற்ற களிமப்பாறைகளிலிருந்து சிறப்பாக வகைபடுத்தப்படுகிறது.
  • ஷேல் பாறைகளின் உருவாக்கத்தின் போது அதில் அகப்பட்டு மீட்டெடுக்கப்படும் வாயு ஷேல் வாயு ஆகும்.
  • ஷேல் வாயு இயற்கை வாயுவை விட மலிவானதாகும். மேலும் இது 50 சதவீதத்திற்கும் குறைவான Co2 வாயுவினை வெளியிடுவதால் மின்சாரம் தயாரிப்பதற்கு சிறந்த ஆதாரமாக உள்ளது.
  • இந்தியாவில் ஆற்றல் வளமிக்க ஷேல் வாயு உள்ள இடங்கள்
    • காம்பே
    • கோண்டுவானா
    • கிருஷ்ணா-கோதாவரி மற்றும்
    • காவிரி படுகைகள்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்