TNPSC Thervupettagam

ஹைட்ரோகுளோரோஃப்ளூரோகார்பன் (HCFC) -141 பி

January 24 , 2020 1640 days 559 0
  • ஹைட்ரோகுளோரோஃப்ளூரோகார்பன் (hydrochlorofluorocarbon - HCFC) 141 பி என்பதன் பயன்பாட்டை இந்தியா முழுமையாக நீக்கியுள்ளது.
  • இது நுரை உற்பத்தியாளர்களால் பயன்படுத்தப்படும் ஒரு வேதிப் பொருளாகும்.
  • இது விறைப்பான பாலியூரிதீன் (rigid polyurethane - PU) நுரைகளின் உற்பத்தியில் வீசப்படுகின்ற ஒரு முக்கியமானப் பொருளாக பயன்படுத்தப் படுகின்றது.
  • மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகமானது 2020 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் HCFC-141bக்கான இறக்குமதி உரிமத்தை வழங்குவதைத்  தடை செய்யும் ஒரு அரசு அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
  • இது சுற்றுச்சூழல் (பாதுகாப்பு) சட்டம், 1986ன் கீழ் வெளியிடப்பட்ட ஓசோனைப் பாதிக்கும் பொருட்கள் (ஒழுங்குமுறை மற்றும் கட்டுப்பாடு) திருத்த விதிகள், 2019ன் கீழ் வெளியிடப் பட்டுள்ளது.
  • நாட்டில், ஓசோனைப் பாதிக்கும் இரசாயனங்களின் 50% நுகர்விற்கு நுரைத் துறையில் காணப்படும் HCFC - 141 பி என்ற வேதிப் பொருள் காரணமாக இருக்கின்றது.
  • வென்னீர் கொதிகலன்கள், குளிர்சாதனப் பெட்டிகள், வெப்பம் சார்ந்த பொருட்கள், மரச்சாமான் உபகரணங்கள், வணிகம் சார்ந்த குளிரூட்டல் போன்ற பயன்பாடுகளில் பாலியூரிதீன் பயன்படுத்தப் படுகின்றது.
  • நுரை சார்ந்த துறையில் நாட்டிலிருந்து HCFC 141பி என்பதின் முழுமையான நீக்கமானது மான்ட்ரீல் நெறிமுறையின் கீழ் உள்ள சரத்து 5 (வளரும் நாடுகள்) நாடுகளிடையே முதலாவது இடத்தில் உள்ளது.
  • நாட்டிலிருந்து HCFC -141 பி என்பதன் முழுமையான நீக்கமானது அடுக்கு மண்டல ஓசோன் அடுக்கைப் பாதுகாக்க உதவுதல் மற்றும் காலநிலை மாற்றத்தைக் குறைத்தல் ஆகிய இரட்டை சுற்றுச்சூழல் நன்மைகளைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்