TNPSC Thervupettagam

ஹைதராபாத்-கர்நாடகா மறுபெயரிடப்பட்டது

September 7 , 2019 1780 days 606 0
  • கர்நாடகா மாநிலத்தின் ஹைதராபாத்-கர்நாடகா என்ற பகுதியை கல்யாண கர்நாடகா என்று பெயரை மாற்றுவதற்கு அம்மாநில அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
  • ஹைதராபாத்-கர்நாடகா என்பது காலனித்துவ காலத்துப் பெயரிடலாகும். இந்தப் பெயரானது இப்பகுதியை முந்தைய ஹைதராபாத் நிஜாம்களுடன் தொடர்பு படுத்துகின்றது.

  • இது கர்நாடகாவில் உள்ள பிடார், பெல்லாரி, கலபுர்கி, கொப்பல், ராய்ச்சூர் மற்றும் யாத்கீர் ஆகிய 6 மாவட்டங்களை உள்ளடக்கியது.
  • இந்த மாவட்டங்கள் நிஜாமின் ஆட்சிப் பிரதேசத்தின் ஒரு பகுதியாக இருந்தன. 1956 ஆம் ஆண்டில் இந்தியாவில் மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்ட போது இந்த மாவட்டங்கள் கர்நாடகாவின் கீழ் கொண்டு வரப்பட்டன.
  • 2012 ஆம் ஆண்டில் 98வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் மூலம் உருவாக்கப்பட்ட 371(j) என்ற சட்டப் பிரிவானது இந்தப் பிராந்தியத்திற்குச் சிறப்பு தகுதிநிலையை  அளிக்கின்றது. இவை நாட்டில் மிகவும் பின்தங்கிய பகுதிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்