தெலுங்கானா மாநிலத் தலைநகரான ஹைதராபாத் மிகவும் ஒலி மாசடைந்த பெருநகரங்களின் (Metropolitan cities) பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
பல்வேறு தொழிற்நுட்ப தொழிற்சாலைகளைக் கொண்டுள்ள, நவாப்களின் நகரம் (City of Nawabs) என்றழைக்கப்படும் நகரமான ஹைதராபாத் நகரமானது இதற்குமுன் நாட்டின் மிகவும் காற்று-மாசுபாடுடைய முன்னணி 10 மெட்ரோ நகரங்களின் பட்டியலிலும் பட்டியலிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் (Central Pollution Control Board - CPCB) படி, 2017-ஆம் ஆண்டு சென்னை நகரம் அதிகபட்ச இரவு ஒலி அளவுகளை (Maximum night sound levels) கொண்ட நகரமாகும். சென்னையைத் தொடர்ந்த இடங்களில் லக்னோ, கொல்கத்தா, மும்பை ஆகிய நகரங்கள் உள்ளன.