ஆந்திரப் பிரதேச அரசானது மின்கல சேமிப்பு மற்றும் பின்னளிப்பு உடைய சூரிய மற்றும் காற்று ஆற்றல் இணைந்த (Hybrid) மின் உற்பத்தி திட்டத்தை அமைக்க திட்டமிட்டுள்ளது.
இந்த வகையிலான திட்டம் இந்தியாவில் ஏற்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். மேலும் இதுவே உலகின் முதல் மற்றும் மிகப்பெரிய சூரிய மற்றும் காற்று ஆற்றல் இணைந்த மின் உற்பத்தி பூங்கா ஆகும்.
இது ஆந்திரப் பிரதேசத்தின் அனந்தப்பூர் மாவட்டத்தில் அமைக்கப்பட உள்ளது.
இத்திட்டத்திற்கு உலக வங்கி நிதியுதவி வழங்க உள்ளது.
மொத்த 160 மெகாவாட் உற்பத்தியில், 120 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி மூலமும், 40 மெகாவாட் காற்றாலைகள் (Wind Turbines) மூலமும் உற்பத்தி செய்யப்படும்.
சோலார் மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்னாற்றலானது மின் கட்டமைப்புகளுக்கு (Grid) பரிமாற்றப்படுவதற்கு பதிலாக ஹைட்ரஜன் மின்கலன்களில் சேமிக்கப்படும்.