TNPSC Thervupettagam

ஹைப்பர்லூப் இரயிலுக்கான இந்தியாவின் முதல் சோதனை பாதை

March 1 , 2025 3 days 82 0
  • இரயில்வே அமைச்சகத்தின் ஒரு ஆதரவுடன் சென்னையின் இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் கழகம் ஆனது, சுமார் 422 மீட்டர் நீளமுள்ள, இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் சோதனை பாதையை உருவாக்கியுள்ளது.
  • இதன் மூலம், 350 கி.மீ தூரத்தினை வெறும் 30 நிமிடங்களில் கடக்க முடியும்.
  • இது 'ஐந்தாம் போக்குவரத்து முறைமை' என்று குறிப்பிடப்படுகிறது.
  • ஹைப்பர்லூப் என்பது நீண்ட தூரப் பயணத்திற்கான மிக அதிவேகப் போக்குவரத்து அமைப்பாகும்.
  • இது வெற்றிடக் குழாய்களில் உள்ள பிரத்யேக நீள் பெட்டகங்கள் வழியாக இரயில்கள் மிக அதி வேகத்தில் பயணிக்க அனுமதிக்கிறது.
  • ஒரு வெற்றிடக் குழாயினுள் மின்காந்த விளைவு காரணமாக அப்பெட்டகங்கள் மிதந்து நகர்வதால் அங்கு உராய்வு நீக்கப்படுகிறது.
  • இது அதன் வழி செல்லும் அப்பெட்டகங்கள் மணிக்கு 1,000 கி.மீ வேகத்தினை எட்ட வழி வகுக்கிறது.
  • ஒரு மாக் என்பது வழக்கமான பயண நாளில், கடல் மட்டத்தில் உள்ள கட்டமைப்பில் மணிக்கு 761 மைல்கள் பயணிக்கும் வேகத்தினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்