TNPSC Thervupettagam

ஹோமியோபதி மத்திய சபை (திருத்த) மசோதா, 2018

August 1 , 2018 2183 days 607 0
  • மே 2018-ல் குடியரசுத் தலைவரால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர சட்டத்திற்கு பதிலாக ஹோமியோபதி மத்திய சபை (திருத்த) மசோதா 2018-னை குரல் வாக்கெடுப்பின் மூலம் மக்களவை நிறைவேற்றியுள்ளது.
  • திருத்தப்பட இருக்கும் ஹோமியோபதி மத்திய மன்ற சட்டம் 1973 ன் படி மத்திய ஹோமியோபதிக்கான மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மன்றம் ஹோமியோபதி கல்வி மற்றும் அணுகுமுறைகளை சீரமைக்கிறது.
  • இம்மசோதா 1973 சட்டத்தினை திருத்தி அமைக்கிறது. இத்திருத்தம் மத்திய சபையினை திருத்தியமைக்கிறது. இத்திருத்தம் மே 18,2018 முதல் நடைமுறைக்கு வருகின்றது.
  • மாற்றி அமைக்கப்பட்டதிலிருந்து ஒரு வருடத்திற்குள் இச்சபை மீண்டும் அமைக்கப்படும்.
  • இடைப்பட்ட காலத்தில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட ஆளுநர்கள் குழு இச்சபையின் பொறுப்புகளை ஆற்றும்.
  • ஆளுநர்கள் குழு, மத்திய அரசால் நியமிக்கப்பட்ட புகழ்பெற்ற ஹோமியோபதி கல்வியாளர் மற்றும் புகழ்பெற்ற நிர்வாகிகள் உட்பட 7 உறுப்பினர்களைக் கொண்டதாக இருக்கும்.
  • மத்திய அரசு இந்த உறுப்பினர்களில் ஒருவரை குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்