தனித்துவமான பெரிய மண்டை ஓடுகளுடன் கூடிய ஹோமோ ஜூலுயென்சிஸ் என்ற ஒரு புதிய மனித இனம் தற்போது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதோடு இதற்கு "பெரிய தலை மனிதர்கள்" என்று பெயரிடப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் கிழக்கு ஆசியாவில் ஹோமோ சேபியன்களுடன் சேர்ந்து வாழ்ந்ததாக இந்த மர்மக் குழுவானது கருதப்படுகிறது.
இந்தப் புதைபடிவ எச்சங்கள் சுமார் 200,000 ஆண்டுகளுக்கு முந்தைய வண்டல் அடுக்குகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் ஆரம்ப அளவீடுகள் ஆனது, இவை ஹோமோ சேபியன்களின் மூளையை விட சுமார் 30% வரை பெரியதாக இருந்ததாகக் காட்டுகிறது.
ஹோமோ ஜூலுயென்சிஸ் சுமார் 300,000 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து கிழக்கு ஆசியாவில் வாழ்ந்து சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து போன இனமாகும்.