ஒரு தொன்மைமிகு மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் இறந்த உடல்களைச் சுவர்களில் புதைக்கும் பழக்கம் கொண்டிருந்ததையும் மற்றும் குகைச் சுவர்களில் ஓவியங்களைச் செதுக்கியதற்கான ஆதாரங்களையும் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நவீன மனிதர்களால் உடல்கள் புதைக்கப்பட்டதற்கான ஒரு ஆரம்பகாலச் சான்று இது ஆகும்.
இவை இதுவரை அறியப்பட்ட ஹோமோசேப்பியன் புதைவிடங்களை விடக் குறைந்தது 100,000 ஆண்டுகள் பழமையானவை ஆகும்.
ஹோமோ நலேடியின் மூளையானது, நவீன மனித மூளையின் அளவில் மூன்றில் ஒரு பங்காகும்.
ஹோமோ நலேடி, பல நூறாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து அழிந்து போன மனித இனமாகும்.
2013 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு அகழ்வாராய்ச்சியின் போது தென் ஆப்பிரிக்காவின் ரைசிங் ஸ்டார் குகை பகுதிகளில் ஹோமோ நலேடியின் படிமங்கள் முதன்முதலில் கண்டுபிடிக்கப் பட்டன.