காளைப் பந்தயம் என்பது தீபாவளிக்குப் பிறகு கர்நாடகாவில் ஏற்பாடு செய்யப்படும் ஒரு பிரபலமான போட்டி நிகழ்வாகும்.
மேலும் இது கர்நாடகாவின் கிராமப்புறங்களில் ஹோரி ஹப்பாவின் ஒரு பகுதியாக நடத்தப் படுகிறது.
ஹோரி ஹப்பா ஹட்டி ஹப்பா என்றும் அழைக்கப்படுகிறது.
நன்கு பயிற்றுவிக்கப்பட்ட மற்றும் அலங்கரிக்கப்பட்ட இழுவை மாடுகள் மற்றும் காளைகள் பெரும் ஆரவாரமான கூட்டத்தின் வழியாக ஓட விடப்படும்.
இப்போட்டியில் பங்கு பெறும் மாடுகளில் கொப்பரை, பணம் மற்றும் பல்வேறு பரிசுப் பொருட்கள் கட்டப்பட்டு, மக்கள் அவற்றைப் பிடித்து, அவற்றிடமிருந்து அந்தப் பொருட்களைப் பறிக்க முயற்சிப்பர்.
ஹோரி ஹப்பா என்பது பெரும்பாலும் தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள ஜல்லிக் கட்டுக்கு மிகவும் ஒத்ததாக இருக்கிறது.