TNPSC Thervupettagam

​​2019 ஆம் ஆண்டின் உலகளாவிய கோ டு திங்க் டேங்க் குறியீட்டு அறிக்கை

February 5 , 2020 1754 days 689 0
  • 2019 ஆம் ஆண்டின் உலகளாவிய கோ டு திங்க் டேங்க் குறியீட்டு அறிக்கை (Global Go to Think Tank Index Report - GGTTI) என்பது உலகில் உள்ள கொள்கை உருவாக்கக் குழுக்களின் ஒரு முழுமையான தரவரிசை அறிக்கையாகும்.
  • இது 2008 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தால் வெளியிடப்பட்டு வருகின்றது.
  • இந்தக் குறியீடானது உலகெங்கிலும் உள்ள சிறந்த கொள்கை உருவாக்கக் குழுக்களை தரவரிசைப் படுத்துகின்றது.
  • இந்த அறிக்கையின் படி, 176 உலகளாவிய கொள்கை உருவாக்கும் குழுக்களில் இந்தியாவைச் சேர்ந்த அப்சர்வர் ஆராய்ச்சி அமைப்பானது 27வது இடத்தில் உள்ளது.
  • இந்த அறிக்கையில் அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச அமைதிக்கான கார்னகி அமைப்பானது முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • 509 கொள்கை உருவாக்கும் குழுக்களுடன் இந்தியா இரண்டாவது நாடாக அதிக எண்ணிக்கையிலான கொள்கை உருவாக்கும் குழுக்களைக் கொண்டுள்ளது.
  • அமெரிக்காவில் அதிக எண்ணிக்கையிலான கொள்கை உருவாக்கும் குழுக்கள், அதாவது 1,871 கொள்கை உருவாக்கும் குழுக்கள் உள்ளன.

 

தரவரிசை

கொள்கை உருவாக்கும் குழு

நாடு

27

அப்சர்வர் ஆராய்ச்சி அமைப்பு (ORF)

இந்தியா

1

சர்வதேச அமைதிக்கான கார்னகி அமைப்பு (CEIP)

அமெரிக்கா

2

புருஜெல்

பெல்ஜியம்

3

சர்வதேச உறவுகளுக்கான பிரஞ்சு நிறுவனம் (IFRI)

பிரான்சு

6

சாத்தம் ஹவுஸ் அமைப்பு

ஐக்கிய ராஜ்ஜியம்

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்