TNPSC Thervupettagam

​​தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதி மற்றும் கனடா ஓய்வூதிய நிதி

December 12 , 2019 1813 days 595 0
  • கனடாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியான கனடா ஓய்வூதியத் திட்ட முதலீட்டு வாரியமானது (Canada Pension Plan Investment Board - CPPIB) தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் (National Investment and Infrastructure Fund - NIIF) சுமார் 600 மில்லியன் டாலர்களை NIIF மாஸ்டர் நிதி மூலம் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
  • புதிதாகத் தொடங்கப்படும் திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள திட்டங்களைப் புதுப்பித்தல் ஆகிய இரண்டிற்கும் வணிக ரீதியாக சாத்தியமான நிதியுதவிக்கான முதலீட்டு வழியாக ரூ 40000 கோடி நிதியுடன் 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசானது NIIFஐ அமைத்துள்ளது.
  • இது இந்தியாவின் முதலாவது இறையாண்மை செல்வ நிதியாகும்.
  • NIIF ஆனது இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (Securities and Exchange Board of India - SEBI) மாற்று முதலீட்டு நிதியாக (Alternative Investment Fund - AIF) பதிவு செய்யப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்