தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதி மற்றும் கனடா ஓய்வூதிய நிதி
December 12 , 2019 1813 days 594 0
கனடாவின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதியான கனடா ஓய்வூதியத் திட்ட முதலீட்டு வாரியமானது (Canada Pension Plan Investment Board - CPPIB) தேசிய முதலீட்டு மற்றும் உள்கட்டமைப்பு நிதியில் (National Investment and Infrastructure Fund - NIIF) சுமார் 600 மில்லியன் டாலர்களை NIIF மாஸ்டர் நிதி மூலம் முதலீடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளது.
புதிதாகத் தொடங்கப்படும் திட்டங்கள் மற்றும் ஏற்கெனவே உள்ள திட்டங்களைப் புதுப்பித்தல் ஆகிய இரண்டிற்கும் வணிக ரீதியாக சாத்தியமான நிதியுதவிக்கான முதலீட்டு வழியாக ரூ 40000 கோடி நிதியுடன் 2015 ஆம் ஆண்டில் இந்திய அரசானது NIIFஐ அமைத்துள்ளது.
இது இந்தியாவின் முதலாவது இறையாண்மை செல்வ நிதியாகும்.
NIIF ஆனது இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தில் (Securities and Exchange Board of India - SEBI) மாற்று முதலீட்டு நிதியாக (Alternative Investment Fund - AIF) பதிவு செய்யப் பட்டுள்ளது.