மேகாலயாவின் மேற்கு காசி மலை மாவட்டத்தில் ஒரு புதிய மீன் இனத்தை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
“சிஸ்துரா சிங்காய்” என்ற அறிவியல் பெயர் கொண்ட இந்த மீன் இனமானது வா ப்ளீ என்ற ஆற்றின் துணை நதியான டுவாடிடோஹ் என்ற ஓடையில் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த மீனின் இரு பாலினங்களும் கருப்பு நிறப் பக்கவாட்டுக் கோடுகளுடன் தங்க - பழுப்பு நிற உடல் அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த மீனின் வால் துடுப்புகள் விரிவடைந்து காணப் படுகின்றன.