TNPSC Thervupettagam

​​​​குஜராத் தீவிரவாத எதிர்ப்புச் சட்டம்

November 8 , 2019 1719 days 608 0
  • குஜராத் தீவிரவாதக் கட்டுப்பாடு மற்றும் முறைசார் குற்றங்கள் (Gujarat Control of Terrorism and Organised Crime - GCTOC) என்ற மசோதாவுக்கு இந்தியக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது ஒப்புதலை வழங்கியுள்ளார்.
  • புதிய சட்டத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று இடைமறித்து கேட்கப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் ஆகும். இது தற்பொழுது ஒரு சட்டப்படியான சான்றாகக் கருதப்படும்.
  • இந்த மசோதாவானது ஒரு சிறப்பு நீதிமன்றத்தை உருவாக்குவதற்கும் சிறப்பு அரசு வழக்குரைஞர்களை நியமிப்பதற்கும் வழிவகை செய்கின்றது.
  • முன்னதாக குஜராத் முறைசார் குற்றக் கட்டுப்பாடு மசோதா (Gujarat Control of Organised Crime - GUJCOC) என்று பெயரிடப்பட்ட இந்த மசோதாவானது 2004 ஆம் ஆண்டு முதல் மூன்று முறை குடியரசுத் தலைவர் ஒப்புதலைப் பெறத் தவறிவிட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்