TNPSC Thervupettagam

​​​​தேசிய அரசியலமைப்பு தினம் அல்லது சட்ட தினம் - நவம்பர் 26

November 27 , 2019 1768 days 713 0
  • ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26 ஆம் தேதியன்று இந்திய அரசியலமைப்பு தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • மேலும் இது சம்விதான் திவாஸ் அல்லது தேசிய சட்ட தினம் அல்லது தேசிய அரசியலமைப்பு தினம் என்றும் அழைக்கப் படுகின்றது.
  • இந்தத் தினமானது 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று இந்திய அரசியலமைப்பானது முறையாக ஏற்றுக் கொள்ளப் பட்டதைக் குறிக்கின்றது.
  • அரசியலமைப்பின் வரைவானது டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தலைமையில் தயாரிக்கப் பட்டது.
  • டாக்டர் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்துவதோடு, அரசியலமைப்பின் முக்கியத்துவம் மற்றும் அரசியலமைப்பின் விழுமியங்கள் ஆகியவை குறித்து   குடிமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்தத் தினம் அனுசரிக்கப் படுகிறது.
  • அம்பேத்கரின் 125வது பிறந்த தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு 2015 ஆம் ஆண்டு முதல் இத்தினம் இது போன்று அனுசரிக்கப் பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்