பாரத் பத்திரப் பரிமாற்ற வர்த்தக நிதியை (Bharat Bond Exchange Traded Fund - ETF) உருவாக்க மற்றும் அதனைத் தொடங்க மத்தியப் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவானது ஒப்புதல் அளித்துள்ளது.
இது நாட்டின் முதலாவது பெருநிறுவன பத்திர ETF ஆகும்.
இது மத்தியப் பொதுத்துறை நிறுவனங்கள், மத்தியப் பொதுத்துறை அமைப்புகள், மத்தியப் பொது நிதி நிறுவனங்கள் மற்றும் பிற அரசு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு கூடுதல் நிதி ஆதாரத்தை உருவாக்க இருக்கின்றது.