காவல் துறையினர் தங்கள் கடமைகளைச் செய்யும்போது உயிரைத் தியாகம் செய்த துணிச்சலான காவலர்களை நினைவில் வைத்திருப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21 ஆம் தேதியன்று தேசியக் காவல் துறை நினைவு தினம் அனுசரிக்கப் படுகின்றது.
2018 ஆம் ஆண்டு காவல் துறை நினைவு தினத்தை முன்னிட்டு கடந்த ஆண்டு டெல்லியில் இந்தியாவின் முதலாவது தேசியக் காவல் துறை அருங்காட்சியகத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
காவல் துறை நினைவு தினத்தின் வரலாறு
1959 ஆம் ஆண்டு அக்டோபர் 21 அன்று லடாக்கில் இருபது இந்திய வீரர்கள் சீனப் படையினரால் தாக்கப்பட்டனர்.
இரு நாட்டுத் துருப்புக்களுக்கு இடையிலான இந்த சொற்போர்ஆனது பத்து காவலர்களின் மரணத்திற்கு வழிவகுத்தது.
சீனச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த மற்ற வீரர்களில் ஏழு இந்திய வீரர்கள் சீனப் படையினரிடமிருந்துத் தப்பிக்க முடிந்தது.
1959 ஆம் ஆண்டு நவம்பர் 28 அன்று சீனத் துருப்புக்கள் தியாகிகளான இந்தியக் காவலர்களின் சடலங்களை இந்தியாவிடம் ஒப்படைத்தனர்.
அவர்களின் உடல் தகனமானது லடாக்கிலுள்ள ஹாட் ஸ்பிரிங்ஸில் முழு காவல்துறை மரியாதையுடன் நடைபெற்றது.