விண்மீன்களுக்கிடைப்பட்ட பகுதியில் வாயேஜர் 2 நுழைவு
November 14 , 2019 1840 days 647 0
நாசாவின் வாயேஜர் 2 ஆனது ஹீலியோஸ்பியரிலிருந்து (சூரியன்சூழ் வான்மண்டலம்) வெளியேறிய மனிதனால் உருவாக்கப்பட்ட இரண்டாவது விண்கலமாக (சூரியக் காற்றினால் உருவாக்கப்பட்ட குமிழி) உருவெடுத்துள்ளது.
வாயேஜர் 1 விண்கலமானது இந்த எல்லையை 2012 ஆம் ஆண்டில் கடந்தது.
வாயேஜர் விண்கலமானது நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களுக்கும் அப்பால் பறக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது விண்கலம் ஆகும்.
வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய மிகப்பெரிய நான்கு வாயுக் கிரகங்களுக்கும் சென்ற ஒரே விண்கலம் வாயேஜர் 2 விண்கலம் ஆகும்.
வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 ஆகிய இரண்டு ஆய்வு விண்கலமானது ஹீலியோஸ்பியரை விட்டு வெளியேறிவிட்டன. ஆனால் அவை சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து இன்னும் வெளியேறாததால் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறவில்லை.
இத்திட்டம் பற்றி
வாயேஜர் 2 விண்கலமானது 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 20 அன்று செலுத்தப்பட்டது. வாயேஜர் 1 விண்கலமானது 1977 செப்டம்பர் 5 அன்று செலுத்தப்பட்டது.
இந்த விண்கலமானது ஐந்து ஆண்டுகள் வரை ஆய்வு செய்யும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இது வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகத்தில் மிக நெருக்கமாக சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும்.
வாயேஜர் 2 ஆனது நாசாவின் மிக நீண்ட காலமாக இயங்கும் ஒரு திட்டமாகும்.