TNPSC Thervupettagam

​​​​​​விண்மீன்களுக்கிடைப்பட்ட பகுதியில் வாயேஜர் 2 நுழைவு

November 14 , 2019 1840 days 646 0
  • நாசாவின் வாயேஜர் 2 ஆனது ஹீலியோஸ்பியரிலிருந்து (சூரியன்சூழ் வான்மண்டலம்) வெளியேறிய மனிதனால் உருவாக்கப்பட்ட இரண்டாவது விண்கலமாக (சூரியக் காற்றினால் உருவாக்கப்பட்ட குமிழி) உருவெடுத்துள்ளது.
  • வாயேஜர் 1 விண்கலமானது இந்த எல்லையை 2012 ஆம் ஆண்டில் கடந்தது.
  • வாயேஜர் விண்கலமானது நமது சூரிய மண்டலத்தில் உள்ள அனைத்து கிரகங்களுக்கும் அப்பால் பறக்கும் மூன்றாவது மற்றும் நான்காவது விண்கலம் ஆகும்.
  • வியாழன், சனி, யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகிய மிகப்பெரிய நான்கு வாயுக் கிரகங்களுக்கும் சென்ற ஒரே விண்கலம் வாயேஜர் 2 விண்கலம் ஆகும்.
  • வாயேஜர் 1 மற்றும் வாயேஜர் 2 ஆகிய இரண்டு ஆய்வு விண்கலமானது ஹீலியோஸ்பியரை விட்டு வெளியேறிவிட்டன. ஆனால் அவை சூரியனின் ஈர்ப்பு விசையிலிருந்து இன்னும் வெளியேறாததால் சூரிய மண்டலத்தை விட்டு வெளியேறவில்லை.

இத்திட்டம் பற்றி

  • வாயேஜர் 2 விண்கலமானது 1977 ஆம் ஆண்டு  ஆகஸ்ட் 20 அன்று செலுத்தப்பட்டது. வாயேஜர் 1 விண்கலமானது 1977 செப்டம்பர் 5 அன்று செலுத்தப்பட்டது.
  • இந்த விண்கலமானது ஐந்து ஆண்டுகள் வரை ஆய்வு செய்யும் வகையில் கட்டப்பட்டுள்ளது. இது வியாழன் மற்றும் சனி ஆகிய கிரகத்தில் மிக நெருக்கமாக சென்று ஆய்வுகளை மேற்கொள்ளும்.
  • வாயேஜர் 2 ஆனது நாசாவின் மிக நீண்ட காலமாக இயங்கும் ஒரு திட்டமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்