இந்திய ரிசர்வ் வங்கியானது வங்கிகளுக்கான ‘100 நாட்கள் 100 பண வழங்கீடு’ என்ற ஒரு பிரச்சாரத்தினை அறிவித்துள்ளது.
நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள ஒவ்வொரு வங்கியிலும் உள்ள உரிமை கோரப்படாத முதல் 100 வைப்புத் தொகைகளை 100 நாட்களுக்குள் கண்டறிந்து அதனை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
10 வருடங்கள் அல்லது அதற்கும் மேலாக வைப்புத் தொகையாளரிடமிருந்து நிதி உட் செலுத்துதல், திரும்பப் பெறுதல் போன்ற எந்தச் செயலும் நடைபெறாத வைப்புத் தொகையானது, செயலற்ற வைப்புத் தொகையாகக் கருதப் படும்.