உயிரித் தொழில்நுட்பத் துறை (DBT) ஆனது, ‘10,000 மரபணுத் தொகையாக்கல்’ என்ற திட்டத்தை நிறைவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது இந்தியா முழுவதற்குமான முழு-மரபணு படமிடலின் குறிப்பு பெறுதலுக்கான தரவுத் தளத்தை உருவாக்கும் முயற்சியாகும்.
இந்தியா முதன்முதலில் 2006 ஆம் ஆண்டில் முழுமையான மனித மரபணுக்களைத் தொகைப் படுத்தியது.
இந்திய மக்கள்தொகையின் பன்முகத்தன்மையின் தரவுத் தளத்தை உருவாக்குவது என்பது இந்தியாவின் மக்கள்தொகை குழுவில் உள்ள தனித்துவமான மரபணு மாறுபாடுகளைப் பற்றி அறிந்து கொள்வதற்கும், மருந்துகள் மற்றும் சிகிச்சைகளைத் தனிப்பயனாக்க அதைப் பயன்படுத்துவதற்கும் ஒரு முக்கிய படிநிலையாகக் கருதப் படுகிறது.
1.3 பில்லியன் இந்திய மக்கள்தொகை என்பது 4,600க்கும் மேற்பட்ட மக்கள்தொகை குழுக்களைக் கொண்டுள்ளது என்பதோடு அவற்றுள் பல உள் இன மரபுத் திருமண முறை கொண்டவையாகும்.
ஐக்கியப் பேரரசு, சீனா மற்றும் அமெரிக்கா ஆகியவை குறைந்தபட்சம் 1,00,000 மரபணுக்களை தொகைப்படுத்துவதற்கான திட்டங்களைக் கொண்ட நாடுகளுள் சிலவாகும்.