TNPSC Thervupettagam

‘2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பருவநிலை’ அறிக்கை

January 23 , 2022 911 days 627 0
  • இந்திய வானிலை ஆய்வு மையமானது, சமீபத்தில் தனது "2021 ஆம் ஆண்டில் இந்தியாவின் பருவநிலை" என்ற அறிக்கையை வெளியிட்டது.
  • 1901 ஆம் ஆண்டில் இந்தியாவில் நாடு தழுவிய பதிவுகள் மேற்கொள்ள தொடங்கியது முதல் 2021 ஆம் ஆண்டு தான் இந்தியாவின் ஐந்தாவது வெப்பமான ஆண்டு என இந்த அறிக்கை கூறுகிறது.
  • 2021 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளால் இந்தியாவில் 1,750  என்ற அளவில் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
  • 350 என்ற அளவிலான உயிரிழப்புகள் பதிவானதுடன், மகாராஷ்டிரா மாநிலம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட ஒரு மாநிலமாக உள்ளது.
  • அங்கு தீவிரமான வானிலை நிகழ்வுகளில், மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழைப் பொழிவே அதிக உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்தன.
  • அதைத் தொடர்ந்து வெள்ளம், கனமழை, நிலச்சரிவு ஆகியவை உள்ளன.
  • இந்தியாவில் வருடாந்திர சராசரி வெப்பநிலையானது 1901-2021 ஆம் காலகட்டத்தில் 100 ஆண்டுகளுக்கு 0.63 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உயர்வைக் கண்டுள்ளது.
  • 1961-2010 காலகட்டத்தின் அடிப்படையில் இந்தியா முழுவதும்  2021 ஆண்டில் ஏற்பட்ட வருடாந்திர சராசரி மழைப்பொழிவானது  அதன் நீண்ட கால சராசரி என்ற அளவில் 105% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்