TNPSC Thervupettagam

‘2022 ஆம் ஆண்டில் CO2 உமிழ்வுகள்’ அறிக்கை

March 10 , 2023 631 days 376 0
  • 2022 ஆம் ஆண்டில் CO2 உமிழ்வுகள் என்ற அறிக்கையினை சர்வதேச எரிசக்தி முகமை வெளியிட்டுள்ளது.
  • உலக எரிசக்தித் துறையில் இருந்து வெளியாகும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வுகள் ஆனது கடந்த ஆண்டு ஒரு சாதனை அளவை எட்டியது.
  • 2022 ஆம் ஆண்டில் உலகளாவிய எரிசக்தித் துறையிலிருந்து வெளியான உமிழ்வு ஆனது 0.9% அதிகரித்துச் சாதனை அளவான 36.8 பில்லியன் டன்களாக இருந்தது.
  • நிலக்கரி சார்ந்த எரிபொருளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு (CO2) கடந்த ஆண்டு 1.6% அதிகரித்துள்ளது.
  • எண்ணெய் சார்ந்த எரிபொருளில் இருந்து வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு ஆனது 2.5% அதிகரித்ததனால் அது பெருந்தொற்றிற்கு முந்தைய அளவை விட குறைவாகவே இருந்தது.
  • சீனாவில் கோவிட் பொது முடக்கம் காரணமாக 2022 ஆம் ஆண்டில் உமிழ்வு குறைந்து உள்ளது.
  • ஐரோப்பிய ஒன்றியத்தில் உமிழ்வு 2.5% குறைந்துள்ளது.
  • ஆசிய பசிபிக் பிராந்தியத்திலும் எதிர்பாராத விதமாக குறைவான அளவானது பதிவாகியுள்ளது (-1.8%).
  • உலகளாவியத் தொழில் துறைகளில் இருந்து மேற்கொள்ளப்படும் உமிழ்வும் குறைந்து உள்ளது.
  • சிமெண்ட் உற்பத்தியில் ஏற்பட்ட 10% சரிவு மற்றும் எஃகு உற்பத்தியில் ஏற்பட்ட 2% சரிவு ஆகியவையே இந்தக் குறைவிற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
  • இயற்கை எரிவாயுவினால் வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு உமிழ்வு 1.6% என்ற அளவிற்குக் குறைந்துள்ளது.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவான உமிழ்வுகளில் மிகப்பெரியத் துறை சார்ந்த உமிழ்வு அதிகரிப்பு ஆனது மின்சாரம் மற்றும் வெப்ப ஆற்றல் உற்பத்தித் துறையில் பதிவாகி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்