‘An Eye On Methane – Invisible But Not Unseen’ அறிக்கை
November 22 , 2024 16 hrs 0 min 23 0
இந்த அறிக்கையானது ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் (UNEP) சர்வதேச மீத்தேன் உமிழ்வு ஆய்வகத்தினால் (IMEO) வெளியிடப்பட்டது.
அதிகளவிலான மீத்தேன் உமிழ்வுகளை அடையாளம் காணும் ஒரு உயர் தொழில்நுட்ப அமைப்பு ஆனது கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசாங்கங்கள் மற்றும் பல்வேறு நிறுவனங்களுக்கு 1,200 அறிவிப்புகளை வழங்கியுள்ளது.
ஆனால் ஒரு சதவீத அறிவிப்புகளுக்கு மட்டுமே பதிலளிக்கப்பட்டது.
வளிமண்டல மீத்தேன் ஆனது, கார்பன் டை ஆக்சைடு (CO2) வாயுவிற்கு அடுத்தபடியாக பல்வேறு மனிதச் செயல்பாடுகள் காரணமாக ஏற்படும் புவி வெப்பமடைதலுக்கான இரண்டாவது பெரிய காரணியாகும்.
இது CO2 வாயுவினை விட 80 மடங்கு சக்தி வாய்ந்தது.
புவி வெப்பமடைதலை 1.5 டிகிரி செல்சியஸ் என்ற வரம்பிற்குள் கட்டுப்படுத்தச் செய்வதற்கான செலவு குறைந்த பாதைகளை அடைவதற்கு, 2030 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய மீத்தேன் வெளியேற்றம் 40-45 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும்.