நாட்டுப்புறக் கலை, நாடகம், தாவரவியல் சார் நீல அச்சுப்படிவக் கலை மற்றும் இசை போன்ற கலைகளை சென்னை மத்திய சிறைச்சாலைக்குள் (புழல்-1) அறிமுகப் படுத்த வேண்டியது பற்றிய ‘Art in Prison’ முன்னெடுப்பானது, தற்போது ஓராண்டு காலத்திற்குத் தொடரப்பட உள்ளது.
இந்த முன்னெடுப்பினை சுமனாசா அறக்கட்டளை மற்றும் திட்டம் 39A ஆகியவை நம் வீடு நம் ஊர் நம் கதை அமைப்புடன் இணைந்து மேற்கொள்கின்றன.
இந்த முன்னெடுப்பில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள புத்தக இயக்கத்திற்காக ஏற்கனவே சுமார் 500 புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன.
ஒரு சேகரிப்பு இயக்கத்திற்குப் பிறகு, இந்தப் புத்தகங்கள் ஆனது புழல் மத்திய சிறைச் சாலையின் கைதிகளுக்கு அனுப்பப்படும்.