மின் வணிகத்திற்காக திறந்த வலையமைப்பு நிறுவனமானது (ONDC), Google Cloud India, Antler in India, Paytm, Protean மற்றும் Startup India ஆகியவற்றுடன் இணைந்து இதை அறிமுகப் படுத்தியது.
இது மின் வர்த்தகத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்வது, பல்வேறு துறைகளில் புதுமை மற்றும் நடைமுறைத் தீர்வுகளை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இதில் புதிய தொழில் தொடங்கும் நிறுவனங்கள், நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் உட்பட 200,000 பங்கேற்பாளர்கள் வரை கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மின் வணிகத்திற்காக திறந்த வலையமைப்பானது (ONDC) 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 31 அன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையின் (DPIIT) கட்டுப்பாட்டின் கீழ் நிறுவப்பட்டது.