மத்திய அரசானது தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு முகமையின் (NADA) ‘Know Your Medicine (KYM)’ செயலியை ஏற்குமாறு நாடு தழுவிய கோரிக்கையினைத் தொடங்கியுள்ளது.
இது விளையாட்டுகளில் ஊக்கமருந்துப் பயன்பாட்டிற்கு எதிரான போராட்டத்தை மிக நன்கு வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பதோடு இதற்கு எதிராக குரல் கொடுக்குமாறு விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஒட்டு மொத்த விளையாட்டுச் சமூகத்தையும் வலியுறுத்துகிறது.
இந்தப் புதுமையான முயற்சியானது, விளையாட்டு வீரர்களுக்கு என்று முக்கியமானத் தகவல்களை வழங்கி, அவர்கள் மிகவும் அலட்சியமாக ஊக்கமருந்துகளை எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும் ஒரு நியாயமான விளையாட்டுத் துறையை மிகவும் நன்கு பேணவும் உதவுகிறது.
2005 ஆம் ஆண்டில் ஊக்கமருந்து இல்லாத விளையாட்டுத் துறையினை உருவாக்கச் செய்வதற்காக இந்திய அரசினால் NADA நிறுவப்பட்டது.