தமிழ் எழுத்தாளர் பெருமாள் முருகனின் ‘பூக்குழி’ என்ற புதினத்தினை அனிருத் வாசுதேவன் என்பவர் ஆங்கிலத்தில் ‘Pyre’ என்ற பெயரில் மொழிபெயர்த்துள்ளார்.
இந்தப் புத்தகமானது 2023 ஆம் ஆண்டிற்கான சர்வதேச புக்கர் பரிசுக்கான தகுதிப் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
இதன் மூலம் புக்கர்ஸ் பரிசிற்குப் பரிந்துரைக்கப்பட்ட முதல் தமிழ் புதினம் என்ற பெருமையினை இது பெற்றுள்ளது.
1980 ஆம் ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கிராமப்புறங்களின் அம்சங்களைக் கொண்ட இந்தப் புத்தகமானது, இளம் கலப்பு திருமணத் தம்பதியினர் உயிர் பிழைப்பதில் உள்ள சிக்கல்கள் மூலம் சாதிய அடிப்படையிலான வன்முறையை ஆராய்கிறது.
ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டிற்கான தகுதிப் பட்டியலில் 13 புதினங்கள் இடம் பெற்று உள்ளன.
2022 ஆம் ஆண்டில், கீதாஞ்சலி ஸ்ரீ 'Ret Samadhi' என்ற புத்தகத்திற்காக சர்வதேச புக்கர் பரிசினை வென்ற முதல் இந்திப் புதின ஆசிரியர் என்ற ஒரு பெருமையினைப் பெற்று உள்ளார்.
இப்புத்தகத்தினை டெய்சி ராக்வெல் என்பவர் ஆங்கிலத்தில் ‘Tomb of Sand’ என்று மொழி பெயர்த்துள்ளார்.