TNPSC Thervupettagam

‘SPACE’ இயங்குதளம்

April 22 , 2024 88 days 136 0
  • ஒலியியல் பண்பு மற்றும் மதிப்பீட்டிற்கான அதிநவீன நீர்மூழ்கி தளம் (SPACE) ஆனது சமீபத்தில் திறக்கப்பட்டது.
  • SPACE தளமானது, முதன்மையாக உணர்வுக் கருவிகள் மற்றும் ஆற்றல் மாற்றிகள் போன்ற அறிவியல் கட்டமைப்புகளை விரைவாகப் பயன்படுத்தவும் அதனை எளிதாக மீட்டெடுக்கவும் அனுமதிக்கின்ற சோனார் அமைப்புகளை முழுமையாக மதிப்பிடச் செய்வதற்குப் பயன்படுத்தப்படும்.
  • நவீன அறிவியல் கருவிகளைப் பயன்படுத்தி காற்று, மேற்பரப்பு, நடுக்கடல் பகுதி மற்றும் நீர்த்தேக்க நிலப்பரப்பு ஆகியவற்றின் அளவுருக்கள் பற்றிய ஆய்வு, மாதிரி மற்றும் தரவுச் சேகரிப்பு ஆகியவற்றிற்கு இந்தத் தளம் பொருத்தமானதாக இருக்கும்.
  • இது இரண்டு தனித்துவமான கட்டமைப்புகளைக் கொண்டிருக்கும்:
    • நீர் மேற்பரப்பில் மிதக்கும் ஒரு தளம், மற்றும்
    • இழுவையேற்றி (வின்ச்) அமைப்புகளைப் பயன்படுத்தி 100 மீ வரையிலான எந்த ஆழத்திற்கும் இறக்கக் கூடிய வகையிலான நீர்மூழ்கித் தளம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்