‘அக்ரே’ மற்றும் ‘அக்சய்’ ஆகிய இரண்டு கப்பல்கள் சமீபத்தில் அறிமுகப்படுத்தப் பட்டன.
இவற்றிற்கு இந்தியக் கடற்படையில் முன்னதாக இருந்த அபய் ரக போர்க்கப்பலில் அக்ரே மற்றும் அக்சய் ஆகியவற்றின் பெயரால் பெயரிடப்பட்டுள்ளது.
இவை SWC திட்டத்தின் தொடரில் உருவாக்கப்பட்ட 5வது மற்றும் 6வது கப்பல்கள் ஆகும்.
அவை கடலோரப் பகுதிகளில் நீர்மூழ்கி எதிர்ப்புச் செயல்பாடுகள், குறைந்த முக்கியத்துவம் கொண்ட கடல்சார் செயல்பாடுகள் (LIMO) மற்றும் கண்ணி வெடிகளை அமைக்கும் செயல்பாடுகளை மேற்கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளன.