மத்திய அரசானது, “அன்ன சக்ரா” மற்றும் SCAN (தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் - NFSA கீழான மானியக் கோரிக்கை விண்ணப்பம்) இணைய தளத்தினை அறிமுகப் படுத்தி யுள்ளது.
இவை இந்தியாவின் பொது விநியோக முறையை (PDS) மிகவும் நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
அன்ன சக்ரா இணையதளம் என்பது இந்தியாவில் PDS முறையின் விநியோகச் சங்கிலியை மேம்படுத்துவதற்கான ஒரு முன்னோடி மிக்க செயற்கருவியாகும்.
உணவு தானியங்களின் போக்குவரத்திற்கான உகந்த வழிகளை இது அடையாளம் காட்டும்.
SCAN இணைய தளம் ஆனது, 2013 ஆம் ஆண்டு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் மாநிலங்களுக்கான மானியக் கோரிக்கை செயல்முறையை மிக நன்கு நெறிப்படுத்தும்.