TNPSC Thervupettagam

‘இந்தியப் பொருளாதாரம் – ஒரு மறுமதிப்பாய்வு’

February 1 , 2024 168 days 247 0
  • அரசாங்கத்தின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் V. ஆனந்த நாகேஸ்வரன் தயாரித்துள்ள "இந்தியப் பொருளாதாரம் – ஒரு மறுமதிப்பாய்வு" என்ற 74 பக்க ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.
  • கோவிட்-19 பெருந்தொற்றிற்குப் பிறகு நான்காவது ஆண்டாக, நாட்டின் பொருளாதாரம் 7% அல்லது அதற்கு மேல் வளர்ச்சி அடைய உள்ளது.
  • உலகப் பொருளாதாரம் ஆனது 4% வளர்ச்சி அடையும் சமயத்தில் இந்தியா 8-9% வளர்ச்சியினை அடையும்.
  • ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் உள்ள 51 கோடி வங்கிக் கணக்குகளில் தற்போது மொத்தம் 2.1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் வைப்புத் தொகை வைக்கப்பட்டுள்ள நிலையில் இதில் 55 சதவீதத்திற்கும் அதிகமானவை பெண்களின் வங்கிக் கணக்குகள் ஆகும்.
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில், குடும்ப நிதிச் சொத்துக்கள் மதிப்பு ஆனது, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 86.2% ஆகவும், கடன் இருப்புகள் ஆனது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 33.4% ஆகவும் இருந்தது.
  • மேலும், 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், இந்த எண்கள் முறையே 103.1% மற்றும் 37.6% ஆக இருந்தது.
  • 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 52.8% ஆக இருந்த குடும்பங்களின் நிகர நிதிச் சொத்துக்கள் ஆனது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 65.5% ஆக உயர்ந்துள்ளது.
  • 2017-18 ஆம் ஆண்டில் 23.3 சதவீதமாக இருந்த பெண் தொழிலாளர் வள பங்கேற்பு விகிதம் ஆனது, 2022-23 ஆம் ஆண்டில் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்