TNPSC Thervupettagam

‘உங்களுக்கானப் புதுமைகள்’ விளக்கப்படப் புத்தகம்

November 14 , 2022 613 days 275 0
  • 'உங்களுக்கான புதுமைகள்’ என்ற விளக்கப்படப் புத்தகத்தின் நான்காவது பதிப்பினை நிதி ஆயோக் அமைப்பின் அடல் புத்தாக்கத் திட்ட அமைப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • இந்தப் புத்தகத் தொடரில் அடல் புத்தாக்கத் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட 3 முதன்மைத் திட்டங்கள் மூலம் ஆதரிக்கப்படும் புத்தொழில் நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் இடம்பெற்றுள்ளன.
  • இதுவரை, விளக்கப்படப் புத்தகங்களின் நான்கு பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
  • முதல் பதிப்பு சுகாதாரத் துறை குறித்து வெளியிடப்பட்டது.
  • இரண்டாவது பதிப்பு வேளாண்மை மற்றும் அதனுடன் தொடர்புடைய துறை மற்றும் மூன்றாவது பதிப்புப் போக்குவரத்து மற்றும் இயங்குதிறன் குறித்தது.
  • 'உங்களுக்கான புதுமைகள்’ விளக்கப்படப் புத்தகத்தின் நான்காவது பதிப்பில் இந்தியாவில் உள்ள 75 வெற்றிகரமான பெண் தொழில்முனைவோர் குறித்தத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்