TNPSC Thervupettagam

‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டம்

February 2 , 2024 168 days 555 0
  • ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்டத்திற்கான வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  • இது பல்வேறு சேவைகளை நன்கு வழங்கச் செய்வதை மேம்படுத்துவதையும் திட்ட அமலாக்கத்தினை விரைவுபடுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட அளவிலான மூத்த அதிகாரிகள் ஒவ்வொரு மாதத்தின் நான்காவது புதன்கிழமையன்று ஒரு தாலுக்காவில் 24 மணிநேரம் (காலை 9 மணி முதல் மறுநாள் 9 மணி வரை) முழுவதும் செலவிடுவார்கள்.
  • அவர்கள் பல்வேறுத் திட்டங்களின் செயல்பாட்டை மதிப்பாய்வு செய்வதோடு, உள் கட்டமைப்பை ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவார்கள்.
  • ஆரம்ப சுகாதார நிலையங்கள், ரேஷன் பொருள் விற்பனைக் கடைகள், கூட்டுறவு சங்கங்கள், பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் போன்றவற்றில் அதிகாரிகள் மதிய வேளைகளில் ஆய்வு மேற்கொள்வர்.
  • இந்த வருகையின் மூலம் பெற்ற கருத்துகளைப் பற்றி விவாதிப்பதற்காக மதியம் 2.30 முதல் மாலை 4.30 மணிக்குள் ஆய்வுக் கூட்டம் நடத்தப்படும்.
  • மாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேர காலமானது, பொதுமக்களுடன் தொடர்பு கொள்வதற்காகவும், அவர்களிடமிருந்து கருத்துகளைப் பெறுவதற்காகவும் பயன்படுத்தப்படும்.
  • அவர்கள் மாலை 6 மணி முதல், சமூக நலத்துறையால் நிர்வகிக்கப்படும் பேருந்து நிலையங்கள் மற்றும் பொது கழிப்பறைகள் போன்ற பல பொதுச் சேவை வசதிகளை பார்வையிடுவார்கள்.
  • மறுநாள் காலை, அதிகாரிகள் பல்வேறு கிராமங்களில் ஆய்வு செய்வதன் மூலம் அங்குள்ள அடிப்படை குடிமை சேவை வசதிகளை ஆய்வு செய்வதோடு, முதல் அமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்த ஆய்வினையும் மேற்கொள்வர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்