‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் இரண்டாம் கட்டம்
November 16 , 2024
12 days
157
- தமிழக அரசானது, அரியலூரில் ‘ஊட்டச்சத்தை உறுதி செய்’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தினைத் துவக்கியுள்ளது.
- ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் மற்றும் அவர்களின் தாய்மார்களுக்கான ஊட்டச்சத்து வழங்கீட்டுத் திட்டமாகும் இது.
- பிறப்பு முதல் சுமார் ஆறு மாதங்கள் வயதான வரையிலான 76,700 குழந்தைகளின் தாய்மார்கள், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக இதில் அடையாளம் காணப் பட்டு உள்ளனர்.
- அவர்களுக்கு இத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் மொத்தம் 22 கோடி ரூபாய் செலவில் பயன்கள் வழங்கப்படும்.
- 2022 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் முதல் கட்டம் ஆனது, ஊட்டச் சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளை அடையாளம் கண்டுள்ளது.
- அரசாங்கத்தின் இந்தத் திட்டத்திற்குப் பிறகு, அவர்களில் சுமார் 77.3% பேரின் ஊட்டச் சத்தில் முன்னேற்றம் ஏற்பட்டு, இயல்பு நிலைக்கு முன்னேறியுள்ளது.
Post Views:
157