‘ஒரே நாடு ஒரே சந்தா’ (ONOS) என்ற முன்னெடுப்பிற்கு சுமார் 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்கள் (HEIs) சிறந்த கல்வி வளங்களை அணுக உதவும்.
ONOS திட்டத்தின் மூலம், அனைத்து அரசு HEI நிறுவனங்களுக்குமான ஆய்வறிக்கை/ ஆய்வு முடிவு அணுகலுக்கான தனித்தனியான அணுகுமுறையை ஒருங்கிணைப்பதை மத்திய அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது.
ONOS ஆனது, மாநில மற்றும் மத்திய அரசு HEIகளை, ஒரே தளத்தில் ஆயிரக்கணக்கான ஆய்வறிக்கைகளை அணுக உதவும் என்பதோடு இது 2025 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும்.
அனைத்து மத்திய மற்றும் மாநில அரசு உயர் அதிகாரிகளுக்குமான ஒரே சந்தா முறையானது, இந்த ஆய்வறிக்கை வெளியீட்டாளர்களுடனான பேச்சுவார்த்தையின் போதான கட்டண வாதிடுதலுக்கான ஆற்றலை வழங்கும்.