தூத்துக்குடி தொகுதியின் மக்களவை உறுப்பினர் கனிமொழி, “காசநோய் இல்லாத தமிழ்நாடு” என்ற 100 நாட்கள் பிரச்சாரத்தினைத் தொடங்கி வைத்தார்.
காசநோய் இல்லாத தமிழ்நாடு என்ற விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தை சென்னை மேயர் பிரியா அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்தப் பிரச்சாரம் ஆனது, பொதுமக்களிடையே காசநோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டதாகும்.
2025 ஆம் ஆண்டிற்குள் காசநோயை ஒழிப்பதற்கு மாநில அரசு இலக்கு வைத்துள்ளது.
2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள், 2,88,331 பேர் காசநோய் பாதிப்பு உள்ளதா என்று பரிசோதிக்கப் பட்டுள்ள நிலைமையில் இதில் 7,968 பேர் பொது சுகாதார மையங்களிலும், 4,857 பேர் தனியார் மருத்துவ மையங்களிலும் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கண்டறியப்பட்ட காசநோயாளிகளின் வீடுகளின் மூலம் ஏற்பட்ட 8,735 தொடர்புகளில், 5,767 பேருக்கு நோய் தடுப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.