கலாச்சார விழாக்களில் ‘குறவன்/குறத்தி ஆட்டம்’ என்ற சொல்லைப் பயன்படுத்தச் செய்வதற்கு எதிராக தமிழ்நாடு மாநிலத்தின் பட்டியலிடப்பட்ட சாதியினர் மற்றும் பழங்குடியினர் (SC & ST) ஆணையம் ஓர் பரிந்துரை அறிக்கையினை வெளியிட்டு உள்ளது.
‘குற’ என்பதை முன்னொட்டு அல்லது பின்னொட்டாகப் பயன்படுத்துவதையும், ‘குறவன்/குறத்தி ஆட்டம்’, என்ற சொல் பழங்குடியினர் சமூகங்களை அவமரியாதை செய்யப் பயன்படுத்தப்படுவதையும் எதிர்க்கும் விதமாக ஆணையம் பரிந்துரைத்து உள்ளது.
‘குறவன்' என்ற பிரிவு தமிழ்நாட்டில் உள்ள பட்டியலிடப்பட்ட சாதியினரின் ஒரு பகுதியினர் ஆவர் என்பதோடு மேலும் 'குறவர்' மற்றும் 'மலைக்குறவர்' என்ற பிரிவு பட்டியலிடப் பட்ட பழங்குடியினர் ஆவர்.
‘குறவன்’ என்ற சொல்லைப் பயன்படுத்தும் பாடல்களையும் தடை செய்ய தமிழக அரசுக்கு ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.