TNPSC Thervupettagam

‘குழந்தை’ என்ற வரையறையில் தெளிவின்மை

December 26 , 2023 207 days 188 0
  • இந்தியாவின் பல்வேறு சட்டங்களின் கீழ் உள்ள ‘குழந்தை’ என்ற சொல்லிற்கு ஒரே மாதிரியான வரையறை தேவை என்று நாடாளுமன்றக் குழு கூறியுள்ளது.
  • 1986 ஆம் ஆண்டு குழந்தை மற்றும் இளம்பருவத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்கு முறை) சட்டத்தின் (CALPRA) படி, ‘குழந்தை’ என்பது தனது பதினான்காவது வயதை நிறைவு செய்யாத நபர் அல்லது 2009 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வயது இவற்றில் எது அதிகமோ அதைக் குறிக்கிறது.
  • 2016 ஆம் ஆண்டு சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தம் ஆனது (14 முதல் 18 வரையான வயதுக்குட்பட்டவர்களை குழந்தைகள் என்று வரையறுக்கிறது.
  • 2009 ஆம் ஆண்டு குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்விச் சட்டத்தின் கீழ், ‘குழந்தை’ என்ற சொல் ஆறு முதல் பதினான்கு வயதிற்குட்பட்ட ஆண் அல்லது பெண் என்று பொருள்படும்.
  • 1948 ஆம் ஆண்டு குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தில், 1986 ஆம் ஆண்டில் மேற் கொள்ளப் பட்ட திருத்தத்தின்படி, ‘குழந்தை’ என்ற சொல் தனது பதினான்காவது வயதைப் பூர்த்தி செய்யாத நபர் என்று வரையறுக்கப்படுகிறது.
  • 2015 ஆம் ஆண்டு சிறார் நீதி (குழந்தைகளின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம், பதினெட்டு வயதை பூர்த்தி செய்யாத ஒரு நபரை ‘குழந்தை’ என்று வரையறுக்கிறது.
  • 2015 ஆம் ஆண்டு சிறார் நீதி சட்டத்தில், ‘இளம் பருவத்தினர்’ என்ற சொல்லானது வரையறுக்கப் படவில்லை.
  • ராஷ்ட்ரிய கிஷோர் ஸ்வஸ்த்ய காரியகாரம் 10 முதல் 19 வரையான வயதிற்குட்பட்ட நபரை இளம் வயதினர் (வாலிபர்) என்று வரையறுக்கிறது.
  • CALPRA சட்டத்திற்கு முரணாக குழந்தைகளை வேலைக்கு அமர்த்துவது பிடியாணை இன்றி கைது செய்யக்கூடிய குற்றமாகும், அதே சமயம் 2015 ஆம் ஆண்டு சிறார் நீதி சட்டத்தின் கீழ் இது பிடியாணை பெறத் தகுந்த குற்றமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்