‘சாகர் நிதி’ எனப்படும் இந்தியாவின் கடல்சார் ஆராய்ச்சிக் கப்பலின் மூலம் கிட்டத் தட்ட 35 நாட்கள் வரை மேற்கொள்ளப்படும் கூட்டுப் பெருங்கடல் ஆய்வுப் பயணத்தில் வங்காளதேசம் மற்றும் மொரீஷியஸ் ஆகிய நாடுகளைச் சேர்ந்த அறிவியலாளர்கள் பங்கேற்கின்றனர்.
கடல் சூழலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்கள் மற்றும் கடல் அளவுருக்களில் ஏற்படும் ஒரு மாறுபாட்டைக் கணிக்கவும் மேலாண்மை செய்வதற்கும், கடல்தரவு பற்றிய ஒரு ஆராய்ச்சியினை அறிவியலாளர்கள் மேற்கொள்ள உள்ளனர்.
சாகர் நிதி என்பது தேசியக் கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தினால் இயக்கப்படும் பனிப் பகுதிகளிலும் பயன்படுத்தக் கூடிய பல்துறைப் பயன்பாட்டுக் கப்பல் ஆகும்.