வருவாய்த்துறை அதிகாரிகளால் ‘சாதி மதம் அற்றவர்' சான்றிதழை வழங்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
அத்தகையதொரு சான்றிதழை வழங்குவதற்கு அவர்களுக்கு எந்தவொரு அதிகாரமும் வழங்கப் படவில்லை.
மேலும், அத்தகைய சான்றிதழானது, முக்கியமாக சொத்துக்களின் பரம்பரை உரிமம் கோருவது தொடர்பான பிரச்சினைகள் மற்றும் கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு பெறுதல் தொடர்பான தனிப்பட்ட மதம் சார் சட்டங்களின் பயன்பாடுகளில் கடுமையான தாக்கங்களை ஏற்படுத்தும்.
1973 ஆம் ஆண்டு அரசு ஆணையானது, ஒரு நபர் தனது சாதி அல்லது மதத்தை பள்ளிச் சான்றிதழில் குறிப்பிடக் கூடாது என்ற அனுமதியினை மட்டுமே வழங்குகிறது.
2000 ஆம் ஆண்டு ஜூலை 13 ஆம் தேதியன்று வெளியிடப்பட்ட மற்றொரு அரசாணை மூலமாக 1973 ஆம் ஆண்டின் அரசாணை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.
மேலும் அவை இரண்டுமே ஒரு பள்ளியில் சேர்க்கை பெறும் போது சாதி மற்றும் மதம் தொடர்பான பத்திகளை காலியாக விட அனுமதிக்கின்றன.
சாதி மற்றும் மதம் குறிப்பிடாமல் மாற்றுச் சான்றிதழைப் பெறவும் இந்த ஆணை அனுமதிக்கிறது.