TNPSC Thervupettagam

‘சிறு வைப்புத் தொகை சார்’ கணக்குச் சரிபார்ப்பு முறை

November 6 , 2023 384 days 315 0
  • ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) ஆனது, ‘சிறு வைப்புத் தொகை சார்’ கணக்குச் சரிபார்ப்பினை மேற்கொண்டுள்ளது.
  • இது தேசிய ஓய்வூதிய முறையின் (NPS) சந்தாதாரர்கள் தங்களது பணத்தை திரும்பப் பெறுவதற்காக, சரியான நேரத்தில் பணப் பரிமாற்றம் மேற்கொள்வதற்கு என்று கட்டாயமான ஒன்றாகும்.
  • 'சிறு வைப்புத் தொகை சார்' கணக்குச் சரிபார்ப்பு செயல்முறை மூலம், மத்தியப் பதிவு பராமரிப்பு முகமைகள் (CRA) சேமிப்பு வங்கிக் கணக்கின் செயல்பாட்டு நிலையைச் சரிபார்க்க இயலும்.
  • இந்த முறையில் வங்கிக் கணக்கு எண்ணில் உள்ள பெயர் ஆனது, PRAN (நிரந்தர ஓய்வூதியக் கணக்கு எண்) எண்ணில் உள்ள பெயருடன் அல்லது சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் உள்ள பெயருடன் பொருத்திப் பார்த்து சரி பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்