ஆந்திரப் பிரதேசத்தின் அனகப்பள்ளி மாவட்டத்தில் உள்ள மலை உச்சியில் அமைந்த ஒரு மிகவும் குக்கிராமமான நீலபந்தாவைச் சேர்ந்தப் பழங்குடியினக் குடும்பங்கள் சுதந்திரத்திற்குப் பிறகு முதல் முறையாக மின்சார வசதியினைப் பெற்றன.
அவர்கள் மின்சார விளக்குகளைப் பெற்ற உற்சாகத்தில் ‘திம்சா’ என்ற பிரபலமானப் பழங்குடியின நடன நிகழ்ச்சியினை நிகழ்த்தியுள்ளனர்.
திம்சா என்பது ஆந்திரப் பிரதேசத்தில் பகதா, வால்மீகி, போரஜா, கோண்ட், கடபா, கோண்டடோரா, முகடோரா மற்றும் கோட்டியா பழங்குடியினரால் நிகழ்த்தப்படும் ஒரு பிரபலமானப் பழங்குடியின நடனமாகும்.
புராணங்கள், நாட்டுப்புறக் கதைகள், பொருளாதார நடவடிக்கைகள், உறவினர்கள் மற்றும் திருமண வாழ்க்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு கருப் பொருள்களுடன் கூடிய இந்த நடனம் ஆனது அவர்களது ஒற்றுமை மற்றும் கலாச்சாரப் பாரம்பரியத்தினை அடையாளப்படுத்துகிறது.
இதில் சுமார் 12 வகையான திம்சா நடனங்கள் உள்ளன என்பதோடு இதன் தோற்றுரு கோண்ட் பழங்குடியினரின் தாயகமான கோராபுட் பகுதியைச் சேர்ந்ததாகக் கூறப் படுகிறது.
ஒரு குழுவில் 20 பேர்களை உள்ளடக்கிய வகையில் மேற்கொள்ளப்படும் இந்த நடன முறையில் காற்று மற்றும் தாள வாத்தியங்களால் எழுப்பப்படும் இசைக்கு ஏற்ப அந்த நடனம் மாறுகிறது.