‘தொல்குடி’ எனப்படும் பழங்குடியினர் மேம்பாட்டிற்கான ஒரு புதிய திட்டத்திற்கு 1,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு அடுத்த நான்கு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.
இந்தத் திட்டத்தின் கீழ், பழங்குடியினர் பகுதிகளில் சாலை வசதிகள், குடிநீர், தெரு விளக்குகள் மற்றும் நிரந்தர வீடுகள் போன்ற அடிப்படை வசதிகள் வழங்கப்படும்.
இந்த முன்னெடுப்பின் ஒரு பகுதியாக பழங்குடியினச் சமூகங்களின் அங்கத்தினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட திட்டங்கள் செயல்படுத்தப்படும்.