TNPSC Thervupettagam

‘நடந்தாய் வாழி காவிரி’ திட்டத்தின் முதல் கட்டம்

June 25 , 2024 6 days 191 0
  • ஜல் சக்தி அமைச்சகத்தின் தேசிய நதி வளங்காப்பு இயக்குநரகம் (NRCD) ஆனது, 'நடந்தாய் வாழி காவிரி திட்டத்தின்' முதல் கட்டத்திற்கு 934.3 கோடி ரூபாய் நிதி ஒதுக்க ஒப்புதல் அளித்துள்ளது.
  • காவிரி ஆற்றின் வளங்காப்பு மற்றும் மறுசீரமைப்பு செய்வதற்காக தமிழக அரசானது இத்திட்டத்தினை முன்மொழிந்துள்ளது.
  • மத்திய மற்றும் மாநில அரசுகள் ஆனது இதற்கான திட்டச் செலவினங்களை முறையே 560.58 கோடி மற்றும் 373.72 கோடி ரூபாய் என்ற 60:40 விகித அடிப்படையில் பகிர்ந்து கொள்ளும்.
  • முதற்கட்டத்தில் மேட்டூர் அணையின் தாழ்மட்டத்தில் இருந்து திருச்சி வரையிலான நதி பாய்வின் வளங்காப்பு பணிகள் உள்ளடக்கும்.
  • இரண்டாம் கட்டத்தில், திருச்சியிலிருந்து பூம்புகார் (நதியானது கடலுடன் சங்கமிக்கும் இடம்) வரையிலான ஆற்றின் எஞ்சியப் பாய்வு பகுதியின் வளங்காப்புப் பணிகள் மேற் கொள்ளப் படும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்