‘நன்னீர் சதுப்பு நிலங்களில் சேமிக்கப்படும் கார்பன்’ பற்றிய இந்தியாவின் முதல் ஆய்வு
September 18 , 2024 66 days 146 0
‘நன்னீர் நிறைந்த சதுப்பு நிலங்களில் சேமிக்கப்படும் கார்பன்’ (டீல் கார்பன்) பற்றிய இந்தியாவின் முதல் ஆய்வு ஆனது ராஜஸ்தானின் பரத்பூர் என்ற மாவட்டத்தில் உள்ள கியோலாடியோ தேசிய பூங்காவில் (KNP) மேற்கொள்ளப்பட்டது.
பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முழுமையான இயற்கை அடிப்படையிலான தீர்வுகளை உருவாக்க இந்த சோதனைத் திட்டம் முயல்கிறது.
டீல் கார்பன் என்பது ஓதங்கள் அல்லாத நன்னீர் ஈரநிலங்களில் சேமிக்கப்படுகின்ற கார்பனைக் குறிக்கிறது என்பதோடு தாவரங்கள், நுண்ணுயிர் உயிரி மற்றும் கரைந்த மற்றும் துகள்மக் கரிமப் பொருட்களில் உள்ளடங்கியுள்ள கார்பனை இது குறிக்கிறது.
'டீல் கார்பன்' என்பது ஒரு வண்ணம் அடிப்படையிலான சொற்கூறாக இருப்பதால், கரிம கார்பனின் இயற்பியல் பண்புகளை விட அதன் செயல்பாடுகள் மற்றும் அதன் இருப்பிடத்தின் அடிப்படையில் அதன் வகைப்பாட்டை அது பிரதிபலிக்கிறது.
டீல் கார்பனுக்கு மாறாக, கருப்பு மற்றும் பழுப்பு கார்பன் ஆகியவை முதன்மையாக காட்டுத் தீ, புதைபடிவ எரிபொருள் எரிப்பு மற்றும் தொழில்துறை நடவடிக்கைகள் போன்ற மூலங்களிலிருந்து கரிமப் பொருட்களின் ஒரு முழுமையற்ற எரிப்பு மூலம் உற்பத்தி செய்யப் படுகிறது.