சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் வரும் இயற்கை வரலாற்றுக்கான தேசிய அருங்காட்சியகமும் ஐக்கிய நாடுகளின் மேம்பாட்டுத் திட்டமும் கூட்டாக இணைந்து இந்த ‘நமது வாழ்வியல் நேரத்தில்’ என்ற பரப்புரையைத் தொடங்கியுள்ளன.
இது எகிப்தில் 27வது உறுப்பு நாடுகளின் மாநாட்டில் வெளியிடப்பட்டது.
இந்தப் பரப்புரையானது நீடித்த வாழ்வியல் முறைக்கான செய்தித் தூதர்களாக 18 வயது முதல் 23 வயது கொண்ட இளைஞர்களை மாற்றச் செய்வதை அங்கீகரித்திட எண்ணுகின்றது.
சுற்றுச்சூழல் சார்ந்த விழிப்புணர்வு கொண்ட ஒரு வாழ்க்கையை வாழ்ந்திட எண்ணுகின்ற, உலகம் முழுவதும் உள்ள துடிப்பான இளைஞர்களுக்கு அதற்கான திட்டங்களுக்கான ஒரு உலகளாவிய அறைகூவலை இந்தப் பரப்புரை வழங்குகின்றது.